Monday 28 November 2016

இன்று நாடு தழுவிய கண்டன நாள் தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களிடமிருக்கும் ஆயிரம், இரண்டாயிரம் பணத்தையும் பறித்து, அம்பானி,அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தரும், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள் திங்களன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகின்றன.மேற்குவங்கம், கேரளா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடக்கும் போராட் டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம் எல்)-லிபரேசன், எஸ்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் பங்கேற்கின்றனர். இதேபோல, மோடியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு பொதுமக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுஎன்று பிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். அன்றிலிருந்து கடந்த 20 நாட்களுக்காக, அன்றாட செலவுக்கே பணமில்லாமல் ஏழை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட முடியாமல் முடங்கி விட்டன. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்ய முடியவில்லை. மக்கள் கையில் பணமில்லாததால், சிறு கடைகள் மட்டுமன்றி பெரிய வர்த்தக நிறுவனங்களும் கூட முடங்கியுள்ளன.

No comments:

Post a Comment