Tuesday, 6 December 2016

08.12.2016 திறந்தவெளி கருத்தரங்கம்

BSNL ஊழியர் சங்கம் திருச்சி, தஞ்சை, குடந்தை மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் திறந்தவெளி கருத்தரங்கம் அடுத்தவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தேதி அறிவிக்கப்படும் 

 08.12.2016காலை அனைத்து கிளைகளிலும் கொடியேற்ற வேண்டும்


A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

தமிழக முதல்வர் செல்வி J.ஜெயலலிதா மரணம்

உடல் நலம் சரியில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் முதல்வர் டாக்டர் J.ஜெயலலிதா அவர்கள் நேற்று (05.12.2016) காலமானார். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு MGR மூலமாக அரசியலுக்கு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர், அ.இ.அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தவர். MGR அவர்களின் மறைவிற்கு பின் அந்தக் கட்சிக்கு தலைமை தாங்கி செயல்பட்டவர். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பொறுப்பு வகித்துள்ளார். அவரது மறைவிற்கு தஞ்சாவூர் மாவட்ட  BSNL ஊழியர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தஞ்சாவூர் மாவட்ட  சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

A .இருதயராஜ், மாவட்ட செயலாளர், தஞ்சாவூர் மாவட்டம்  

Monday, 5 December 2016

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 60th Anniversaryமகாத்மா காந்திக்குப் பின் சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் யார் என்பது குறித்து மக்களிடம் நடத்திய வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு 2 கோடி பேர் வாக்களித்து, நாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன், கள ஆய்வு மற்றும் நடுவர் வாக்குகள் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இவற்றில் அண்ணல் அம்பேத்கருக்கு 2 கோடி வாக்குகள் கிடைத்தன. தேசத்தின் ஒப்பற்ற தலைவர் அவரே என்பது பெருவாரியான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரை ஒரு தலித் சமுதாய தலைவராக, பிரதிநிதியாகப் பார்க்கக் கூடாது என்றும், அவர் இந்த நாட்டைக் கட்டமைத்த ஒப்பற்ற சிற்பி என்பதை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

Sunday, 4 December 2016

டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம். BSNLஐ காத்திடுவோம்!!!

15.12.2016அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும் என மாநில, மாவட்ட சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அளவில் அனைத்து சங்கங்களின் தலைவர்களை அணுகி விவாதிக்கப்பட்டது. அனைத்து சங்கங்களின் சார்பாக ஒரு சுற்றறிக்கையும், சுவரொட்டியும் தயாராகிக் கொண்டுள்ளது. அது விரைவில் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில் BSNL ஊழியர் சங்கத்தின் செயலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்திட வேண்டும். தல மட்டங்களில் அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலை நிறுத்தத்திற்கான பணிகளை கூட்டாக செய்திட வேண்டும். அனைத்து அதிகாரிகள் சங்கங்களும், ஊழியர் சங்கங்களும் இருப்பதால் இந்த வேலை நிறுத்தம் சிறப்பாக நடைபெற்று விடும் என்று அசிரத்தையாக இருந்து விடக்கூடாது. மற்றவர்கள் முன்கையெடுப்பார்கள் என்றும் நாம் இருந்து விடக்கூடாது. BSNL ஊழியர் சங்கம் தான் முன்கையெடுக்க வேண்டும். பலமானதொரு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக நாம் போராடுகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு பலமான ஒன்று பட்ட போராட்டத்தின் மூலமாகவே துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்த முடியும். எனவே நூறு சதவிகித ஊழியர்களின் பங்கேற்பை வேலை நிறுத்தத்தில் உறுதி செய்ய வேண்டும். வேலை நிறுத்தம் நடைபெற குறுகிய கால அவகாசமே உள்ளது. அனைத்து சங்க உறுப்பினர்களையும் ஒன்றாக திரட்டி தலமட்டங்களிலே வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டங்களை நடத்திட வேண்டும். சுற்றறிக்கை எண்.141 என தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள மத்திய சங்கத்தின் சுற்றறிக்கையில் உள்ள விஷயங்களை பயன்படுத்தி மாவட்ட மட்டங்களில் தேவையான சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும். ஊழியர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் பணியிடங்களுக்கே சென்று, தேவைப்பட்டால் அவரகளின் இல்லங்களுக்கும் சென்று சந்தித்து கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதன் மூலம் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம். BSNLஐ காத்திடுவோம்=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

Monday, 28 November 2016

தஞ்சை பொது மேலாளர் உடன் சந்திப்பு

நாளை 29-11-2016 மதியம்  0200 மணிக்கு  தஞ்சை பொது மேலாளர் அவர்களை சந்தித்து புதிய நிர்வாகி பட்டியலை சமர்ப்பித்து அறிமுகம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நாடு தழுவிய கண்டன நாள் தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களிடமிருக்கும் ஆயிரம், இரண்டாயிரம் பணத்தையும் பறித்து, அம்பானி,அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தரும், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள் திங்களன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகின்றன.மேற்குவங்கம், கேரளா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடக்கும் போராட் டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம் எல்)-லிபரேசன், எஸ்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் பங்கேற்கின்றனர். இதேபோல, மோடியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு பொதுமக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுஎன்று பிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். அன்றிலிருந்து கடந்த 20 நாட்களுக்காக, அன்றாட செலவுக்கே பணமில்லாமல் ஏழை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட முடியாமல் முடங்கி விட்டன. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்ய முடியவில்லை. மக்கள் கையில் பணமில்லாததால், சிறு கடைகள் மட்டுமன்றி பெரிய வர்த்தக நிறுவனங்களும் கூட முடங்கியுள்ளன.

Sunday, 27 November 2016

Prepare for the one day strike to be held on 15.12.2016

The dharna held on 25.11.2016 against formation of the Subsidiary Tower Company,  the preparation for the one day strike, to be held on 15.12.2016. Hence, Branch unions are requested to mobilise maximum number of Non-Executives and Executives, so that it will be a grand success of  one day strike. The massive success of strike should send the right message to the government also.. 

BSNLEU THANJAVUR DIST CONFERENCE AT TIRUTHURAIPOONDI ON 25/11/2016

President               :        Com D.Subramanian, Thanjavur
Vice President             :    1.       Com K.Pitchaikannu, Mannargudi
                                  :    2.        Com K.Sundaramoorthi, Tiruvarur
                                  :    3.        Com M.Kalaiselvi, Pattukottai
                                  :    4.        Com N.Nagarajan, Tiruthuraipoondi
Secretary               :       Com A.Irudayaraj, Thanjavur
Asst Secretary             :    1.        Com R.Ramanan, Thanjavur
                                  :    2.        Com J.Ramesh, Thanjavur
                                  :    3.        Com K.S.Balasubramanian, Thanjavur
                                  :    4.        Com K.T.Murugaiyan, Tiruthuraipoondi
Treasurer              :       Com P.Manickam, Papanasam
Asst Treasurer            :    1.  Com D.Asokan, Pattukottai
Organizing Secretary :   1.  Com R.Sundararajan, Peravurani
                                :    2.  Com K.Karikalan, Pattukottai
                                :    3.  Com K.Durairajan, Papanasam
                                :    4.  Com K.Vethamani, Thanjavur
                                :    5.  Com U.Panneerselvam, Tiruvarur
                                :    6.  Com T.Kalimuthu, Thanjavur
                                :    7.  Com R.Mythili, Thanjavur

Auditor                      :       Com M.Mohamed Yasin, MannargudiWednesday, 5 October 2016

BSNL அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தஞ்சை SSA வில் இருந்து மன்னை கிளை தோழர் விமல்ராஜ் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று நமது மாவட்டத்திற்கும் BSNLEU சங்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் அவருக்கு தஞ்சை மாவட்ட BSNLEU சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை மாவட்டம் 

Tuesday, 20 September 2016

Monday, 19 September 2016

PLI குழுவிற்கான ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யூ, NFTE யின் பொதுச் செயலர் தோழர் சண்டேஸ்வர்சிங் ஆகியோர் CMD திரு அனுபம் ஸ்ரீவத்சவ் அவர்களைச் சந்தித்து PLI தொடர்பாக கலந்தாலோசித்தார்கள்.

CMD அவர்கள் 2014-15ஆம் ஆண்டிற்கான PLI ஆக ரூ. 3000 தர ஒப்புக் கொண்டுள்ளதையும், அதற்கான கோப்பு மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது நமது தொடர்ந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…
என்றபோதிலும்…
கோரிக்கைகள் 24ல் ஒன்றின் ஒரு பகுதிக்காக போராட்டம் நிறுத்தப்படமாட்டாது.

மூன்றாம் கட்டப் போராட்டமான
உண்ணாவிரதம்
நாளை (20-09-2016)
திட்டமிட்டபடி நடைபெறும்.
D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை மாவட்டம்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
     தஞ்சை மாவட்டம்  

Thursday, 1 September 2016

செப்டம்பர் 2 வேலை நிறுத்தம்.

      விலை வாசியை கட்டுப்படுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே/தனியார் மயமாக்காதே, குறைந்த பட்ச கூலியாக ரூ.18,000/- நிர்ணயம் செய்துவிடு என்பது உள்ளிட்ட இந்திய நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் தேசம் தழுவிய தேச பக்த போராட்டமான செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் பெரு வாரியாக பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.

சுற்றறிக்கை எண்:125

ஊதிய பேச்சு வார்த்தையும் இதர செய்திகளும்…<<<Click Here>>>